Your Ad Here

"கவனமாக இருக்க வேண்டும் ஸ்ருதிக்கு கமல் அறிவுரை


       மும்பையில், மர்ம நபர், என் மகள், ஸ்ருதியை தாக்கியுள்ளதால், கவனமாக இருக்கும்படி, அவரிடம் அறிவுறுத்தியுள்ளேன், என, நடிகர், கமல் ஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல் ஹாசனின், மூத்த மகளும், பிரபல நடிகையுமான, ஸ்ருதி ஹாசன், தற்போது, இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்காக, மும்பையில் உள்ள, அடுக்கு மாடி குடியிருப்பில், அவர் தங்கியுள்ளார். நேற்று முன்தினம், ஸ்ருதி, தன் வீட்டுக்கு வந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த நபர், திடீரென தாக்கினார். ஸ்ருதி, திருப்பி தாக்கியதை அடுத்து, அந்த மர்ம நபர், தப்பி ஓடினார்.

இந்நிலையில், கோவாவில், நேற்று துவங்கிய, சர்வதேச திரைப்பட விழாவுக்கு வந்திருந்த, கமல் ஹாசனிடம், இதுகுறித்து கேட்கப்பட்டது. அவர் கூறியதாவது: இந்த சம்பவம் தொடர்பாக, ஸ்ருதியிடம், போனில் பேசினேன். தற்போது, நலமாக இருப்பதாகவும், பிரச்னை எதுவுமில்லை என்றும், அவர் கூறினார். "நீ, மும்பையில் வசிக்கிறாய். எனவே, கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என, ஸ்ருதியிடம் அறிவுறுத்தியுள்ளேன். இவ்வாறு, கமல் கூறினார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்