Your Ad Here

தனுஷுடன் நடிப்பதால் அக்ஷராவுக்கு ஸ்ருதி அட்வைஸ்


    தனுஷுடன் நடிப்பதால் தங்கை அக்ஷராவுக்கு அறிவுரைகள் கூறியிருக்கிறார் அக்கா ஸ்ருதி. கமலின் மூத்த மகள் ஸ்ருதியை தொடர்ந்து இளைய மகள் அக்ஷராவும் நடிக்க வருகிறார். டைரக்ஷன் கற்ற அக்ஷரா, தனக்கு நடிப்பு ஆசை கிடையாது. கேமராவுக்கு பின்னால் இருப்பதே பிடிக்கும் என்றெல்லாம் கூறி வந்தார்.

ஆனால் ஸ்ருதிஹாசன் நடித்த ஓரிரு படங்கள் வெற்றி பெற்று, இப்போது அவர் பிசியாகிவிட்டதை பார்த்த அக்ஷரா மனம் மாறினார். செட்டுக்கு வந்து டைரக்டர் சொல்கிறபடி நடித்துவிட்டு போவதுதான் பெஸ்ட் என அவர் முடிவுக்கு வந்திருக்கிறார். அவரை தமிழ், தெலுங்கில் நடிக்க வைக்க சில இயக்குனர்கள் முயன்றார்கள்.

மணிரத்னமும் தீவிர முயற்சி செய்தார். ஆனால் அக்கா ஸ்ருதியை போலவே நேரடியாக பாலிவுட்டில் அறிமுகமாகவே அக்ஷரா விரும்பினார். அதேபோல் இப்போது அவருக்கு பாலிவுட் வாய்ப்பு அமைந்துவிட்டது. பால்கி இயக்கும் இந்தி படத்தில் அக்ஷரா ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதில் முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார். அக்ஷரா வுக்கு ஜோடியாக நடிக்கப்போவது தனுஷ்.

தனுஷ் நடிப்பதை அறிந்த தும் அவருடன் ஏற்கனவே 3 படத்தில் நடித்த அக்கா ஸ்ருதி, அக்ஷராவுக்கு சில அறிவுரைகளை கூறினாராம். ஸ்கிரிப்ட் கேட்டு மனதளவில் அதற்கான ஹோம்ஒர்க்கில் தனுஷ் ஈடுபடுவார். கேமரா ஓடும்போது இயல்பாக நடித்துவிட்டுபோவார்.

3 படத்தில் என்னையும் ராஞ்சனா படத் தில் சோனம் கபூரையும் அவர் நடிப்பில் ஓவர் டேக் செய்தது இப்படித்தான். தனுஷுக்கு இணையாக நடிப்பு திறமையை காட்ட நீ தயாராக இருக்க வேண்டும் என்பது உள்பட பல அறிவுரைகளை அக்ஷராவுக்கு கூறினாராம் ஸ்ருதி.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்