Your Ad Here

அனுஷ்கா பற்றி எதுவும் சொல்லவே இல்லை : சமந்தா அலறல்


    அனுஷ்காவை முன்னணி நடிகை என்று நான் சொல்லவில்லை என்று கூறி இருக்கிறார் சமந்தா. சித்தார்த்துடன் காதல், ஸ்ருதிஹாசன் தோல்வி படம் தந்ததால் கேக் வெட்டி விழா கொண்டாடினார் என்று சமந்தாவை பற்றி புற்றீசல் போல் பரபரப்பான செய்திகள் இணையதளங்களில் வந்த வண்ணம் உள்ளன. அதேபோல், அனுஷ்கா சிறந்த நடிகை.

அவரது அன்பான அணுகுமுறையும், ஈடுபாடும்தான் தொடர்ந்து அவரை இயக்குனர்கள் தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்வதற்கு காரணம். அத்துடன் முன்னணி இடத்திலும் அவரால் நீடிக்க முடிகிறது என்று சமந்தா பேட்டியில் கூறியதாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. ஆனால் இதை சமந்தா தரப்பு மறுத்திருக்கிறது.

அனுஷ்கா பற்றி எந்த பத்திரிகைக்கும் சமந்தா பேட்டி தரவில்லை. சமந்தாவே முன்னணி நடிகையாக இருக்கும் போது அனுஷ்காவை முன்னணி இடத்தில் இருப்பதாக எப்படி சொல்வார். இதை ரசிகர்கள் நம்ப வேண்டாம். சமந்தா பெயரில் நிறைய பேட்டிகள் வருகின்றன. அவை எல்லாமே அவர் உண்மையில் தந்த பேட்டி அல்ல. எதுவாக இருந்தாலும் சமந்தா தனது இணையதள பக்கத்தில் சொல்வதுதான் நிஜம் என்று தெரிவித்துள்ளனர்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்