Your Ad Here

திருமணம் பற்றி சரிகா கருத்து கமல் திடீர் எதிர்ப்பு : பழைய கலாசாரம் என குற்றச்சாட்டு


     திருமணம் பற்றி சரிகா கூறிய கருத்துக்கு கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசன், சரிகா மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். தற்போது சரிகா மும்பையில் வசிக்கிறார். அவருடன் 2வது மகள் அக்ஷரா இருக்கிறார். மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தனி வீட்டில் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் சரிகா மும்பை பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது திருமணம்பற்றி அவரிடம் கருத்து கேட்டபோது,திருமணம் என்பது ஒரு அழகான உறவு என்று குறிப்பிட்டிருந்த திருமணம் குறித்து சரிகா கூறிய கருத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா என்றதற்கு  பதில் அளித்த கமல்  அந்த கருத்தை நான் ஏற்கவில்லை. திருமணம் என்பது ஓல்டு பேஷன் (பழைய கலாசாரம்). ஒருவரை வலுக்கட்டாயமாக மற்றொருவருடன் தங்க வைப்பதற்கான சட்டப்படியான ஒப்பந்தம்.

யார் மீதாவது உண்மையான காதல் இருந்தால் பேப்பரில் எழுதும் அங்கீகாரம் தேவையே இல்லை. மறுமணம் செய்துகொள்வீர்களா என்கிறார்கள். இப்போதைக்கு நான் ரொம்பவும் சந்தோஷமாகவும், சவுகர்யமாகவும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்றார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்