செல்வராகவனின் ஆக்ஷன் படத்தில் தனுஷ்?
தம்பி தனுஷை துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகம் செய்த செல்வராகவன், அதன்பிறகு அவரை வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை இயக்கினார். இதில் காதல் கொண்டேன் மட்டுமே வெற்றி பெற்றது. அதனால் அதன்பிறகு அண்ணன் காம்பினேஷனில் இருந்து விலகி மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார் தனுஷ். அதேபோல் செல்வராகவனும் வேறு நடிகர்களை இயக்குவதில் கவனம் செலுத்தினார்.
இதில் கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன், ஆர்யா நடித்த இரண்டாம் உலகம் படங்களை மெகா பட்ஜெட்டில் இயக்கிய செல்வராகவன், அடுத்து மினிமம் பட்ஜெட்டில் ஒரு படம் தயாரிக்கப்போகிறாராம். அதுவும் அதிரடி ஆக்சன் படமாம். இந்த படத்தில் நடிக்கும் ஹீரோ யார் என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லையாம்.
ஆனால், தனுஷ் நடிக்க வாய்ப்பிருப்பதாக செல்வராகவன் வட்டாரத்தகவல் கூறுகிறது. தற்போது அநேகன், வேலையில்லா பட்டதாரி படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் தனுஷ், அதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்துக்கொண்டே அண்ணனின் படத்தில் நடிப்பார் என்கிறார்கள். ஆக, சுள்ளான், பொல்லாதவன், வேங்கை படங்களுக்குப்பிறகு மீண்டும் சூடுகாட்ட வருகிறார் தனுஷ்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
