Your Ad Here

சிம்புவின் அடுத்த குறி சமந்தா


     நயன்தாராவை தொடர்ந்து சமந்தாவுடன் ஜோடி சேர காத்திருக்கிறார் சிம்பு. வாலு படம் மூலம் இணைந்த சிம்பு, ஹன்சிகா நிஜவாழ்வில் காதலர்களாயினர். இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் தனது மாஜி காதலி நயன்தாராவுடன் நடிக்கிறார் சிம்பு. இது ஹன்சிகாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுவதுடன் சிம்புவுடனான காதலுக்கு குட்பை சொல்லிவிட்டார் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

காதலிப்பதாக ஒரே நேரத்தில் இணைய தளம் மூலம் அறிவித்த சிம்பு-ஹன்சிகா தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக இதுவரை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் இருவரும் மனக்கசப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கவுதம் மேனன் படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் சிம்பு. ஏற்கனவே கவுதம் மேனன் படங்களில் நடித்திருப்பவர் சமந்தா. கவுதமுக்கும், சமந்தாவுக்கும் நல்ல புரிதல் இருக்கிறது.

தற்போது தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும் கவுதம் கேட்கும்பட்சத்தில் அவருக்கு கால்ஷீட் அட்ஜெஸ்ட் செய்து தர சமந்தா தயாராக இருக்கிறார். இந்த சூழலில் தனக்கு ஜோடியாக சமந்தா நடித்தால் நன்றாக இருக்கும் என கவுதம் மேனனின் காதில் போட்டு வைத்திருக்கிறாராம் சிம்பு.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்