Your Ad Here

கமலுடன் மீண்டும் ஜோடி சேரும் ஸ்ரீதேவி?


                         16 வய­தி­னிலே' படத்தில் சப்­பாணி - மயி­லாக ஜோடி சேர்ந்த கமல் - ஸ்ரீதேவி இரு­வரும் அதை தொடர்ந்து சிறந்த ஜோடி­யாக தமிழ் சினி­மாவில் வலம் வந்­தனர். ஆனால், ஸ்ரீதேவி இந்­திக்கு சென்ற பின் அவர்கள் இணைந்து நடிக்­க­வில்லை. இந்­நி­லையில், 16 ஆண்­டு­க­ளுக்கு பின், 'இங்­கிலீஷ் விங்­கிலீஷ்' படம் மூலம் சினி­மாவில் ரீ-என்ட்ரி ஆகி­யி­ருக்கும் ஸ்ரீதேவி, தன் 'மாஜி' ஹீரோக்­க­ளுடன் மீண்டும் நடிக்க ஆர்­வ­மாக உள்­ள­தா­கவும் கூறி வந்தார்.
இதை­ய­டுத்து, மீண்டும் அவர் கம­லுடன் நடிப்­ப­தற்கு சூழ்­நிலை உரு­வா­கி­யி­ருப்­ப­தாக
செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன. மணி­ரத்னம் இயக்­கத்தில், கமல் நடித்த 'நாயகன்' படத்தின், இரண்டாம் பாகம் உரு­வா­கி­றதாம். அப்பா - மகன் என,கமல் இரண்டு வேடங்­களில் நடிக்கும் இப்­ப­டத்தில், அப்பா கம­லுக்கு ஜோடி­யாக, ஸ்ரீதேவி நடிக்­க­வி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்