Your Ad Here

கதை இல்லாமல் ஷூட்டிங் தொடங்கினார் கவுதம் மேனன்


    கதையே இல்லாமல் ஷூட்டிங்கை தொடங்கி இருக்கிறார் கவுதம் மேனன். சூர்யாவை வைத்து சென்னையில் ஒரு மழைக்காலம் என்ற படத்தை எடுக்க ஆரம்பித்தார் கவுதம். அந்த படத்துக்கு ஒன்லைன் ஸ்டோரி மட்டுமே அவர் ரெடி செய்திருந்தார். சூர்யா-அசின் நடித்த சில காட்சிகளை படமாக்கினார். தொடர்ந்து ஸ்கிரிப்ட் எழுத முடியாமல் அந்த படத்தை கைவிட்டார்.

வாரணம் ஆயிரம் படத்தை முழுநீள ஆக்ஷன¢ த்ரில்லராக உருவாக்க ஒன்லைன் ஸ்டோரி எழுதி ஷூட்டிங்கை தொடங்கினார் கவுதம். அந்த நேரத்தில் அவரது தந்தை காலமானார். இதையடுத்து தனது தந்தையுடன் அவருக்கு இருந்த அன்பு, நட்பு ஆகியவற்றை தொகுத்து ஒரு கதையை உருவாக்கினார். அதுதான் வாரணம் ஆயிரம் பட கதை என முடிவு செய்து படத்தின் ஜானரை மாற்றினார்.

இதே போல் இப்போது சிம்பு நடிக்கும் பட ஷூட்டிங்கை கதையே இல்லாமல் தொடங்கியிருக்கிறாராம் கவுதம். சமீபத்தில் சிம்பு நடித்த சில காட்சிகளை அவர் படமாக்கியுள்ளார். அந்த காட்சிகளை வைத்து கதையை எழுதப்போகிறாராம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்