Your Ad Here

நடிகர் குள்ளமணிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை


    ஏராளமான தமிழ் படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருப்பவர் குள்ளமணி . கடந்த வாரம் இவரது குடும்பத்தார் ஊருக்கு சென்றிருந்தனர். அப்போது கே.கே.நகரிலுள்ள வீட்டில் கவலைக்கிடமான நிலையில் இருந்தார் குள்ளமணி. உடனே அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

அங்கிருந்து குள்ளமணியைப் பரிசோதித்த டாக்டர்கள், இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து மேல் சிகிச்சை அளிப்பதற்காக, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.

அவரது சிறுநீரகங்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் டயாலிசிஸ் செய்யப்படும். தொடர்ந்து ஒரு மாதம் அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டும். சில நேரம் நன்றாக பேசும் அவர், திடீரென மறதியால் அவதிப்படுகிறார். நடிகர் சங்க தலைவர் சரத்குமார், சனிக்கிழமை மாலை மருத்துவமனைக்கு சென்று குள்ளமணியை பார்த்தார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்