Your Ad Here

ஞான கிறுக்கனுக்கு லைவ் ரெக்கார்டிங்


     ஞான கிறுக்கன் படத்துக்கு இசை அமைப்பாளர் தாஜ்நூர் லைவ் ரெக்கார்டிங் செய்துள்ளார்.தங்கம்மாள் மூவி மேக்கர்ஸ் சார்பாக தங்கம்மாள் தயாரிக்கும் படம், ‘ஞான கிறுக்கன்’. டேனியல் பாலாஜி, ஜெகா, அர்ச்சனா கவி, செந்தி, தம்பி ராமையா உட்பட பலர் நடிக்கின்றனர். செல்வகுமார் ஒளிப்பதிவு. தாஜ்நூர் இசை அமைக்கிறார். படத்தை எழுதி இயக்கும் இளையதேவன் கூறியதாவது:இது, ஒரு மனிதன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சொல்லும் கதை என்பதால் லைவ் ரெக்கார்டிங் செய்தால் நன்றாக இருக்கும் என்று இசை அமைப்பாளர் தாஜ்நூரிடம் சொன்னேன்.

அவரும் சரியென்று பாடல் மட்டுமின்றி பின்னணி இசையையும் லைவாகவே செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு லைவ் ரெக்கார்டிங் செய்துள்ள படம் இது. ரெக்கார்டிங்கில் பணியாற்றிய இசை கலைஞர்கள் படத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். படத்தின் மொத்த வேலையும் முடிந்துவிட்டது. விரைவில் ரிலீஸ் செய்ய இருக்கிறோம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்