Your Ad Here

அசினை காப்பாற்றிய பெண்கள் படை


        பெரும் எதிர்பார்ப்புகளுடனும், கனவுகளுடனும், பாலிவுட்டுக்கு சென்ற அசின், அங்கு, தொடர்ச்சியாக, தனக்கு வாய்ப்பு கிடைக்காததால், அதிர்ந்து போயிருக்கிறார். ஆனாலும், அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, அபிஷேக் பச்சன் ஜோடியாக, தற்போது ஒரு பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில், பாங்காக்கில் உள்ள, புத்த கோவில் அருகே நடந்தது. இதில், புல் மேக்-அப்புடனும், கவர்ச்சியான உடையுடனும், அசின் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென, மழை கொட்டத் துவங்கியது. இந்த மழையால், தன் மேக்-அப் கலைந்து, உடைகள் ஈரமாகிவிட்டால், என்ன செய்வது என, பயந்து நடுங்கினாராம், அசின். அப்போது, அவரின் மேக்-அப் கலைஞர்கள், உதவியாளர்கள், நடன உதவியாளர்கள் ஆகிய குழுக்களில் பணியாற்றிய இளம் பெண்கள் படை, அசினை, பாதுகாப்பாக மீட்டு, நனையாமல் பாதுகாத்தனராம். இதனால், அன்று முழுவதும், அவர்களுக்கு தொடர்ந்து, நன்றி கூறிக்கொண்டே இருந்தாராம், அசின்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்