Your Ad Here

நான் முழுமையான ஹீரோவாகியிருக்கும் படம் தகராறு


     க்ளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கும் படம், ‘தகராறு’. அருள்நிதி, பூர்ணா ஜோடி. தில்ராஜ் ஒளிப்பதிவு. கணேஷ் விநாயக் இயக்கி உள்ளார். தருண்குமார் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பின்னர் அருள்நிதி, நிருபர்களிடம் கூறியதாவது:‘மவுனகுரு’ படத்துக்கு பிறகு சிறிய இடைவெளிவிட்டு நடிக்கும் படம் இது. அப்பாவியாகவோ அல்லது சீரியசான கேரக்டர்களிலோதான் முந்தைய படங்களில் நடித்திருக்கிறேன். முழுமையான ஹீரோவாக இதில் நடித்திருக்கிறேன். மஹத் நடிக்க வேண்டிய படம் இது. அவர் விட்டுக் கொடுத்ததால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. நான் வளர்ந்து வரும் நடிகன் என்பதால் புதுமுக இயக்குனர்களின் படங்களில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்.

எனது குடும்பம், எனது பின்னணியை மறந்துவிட்டு நடிகனாக மட்டுமே இருக்க விரும்புகிறேன். நடிகனாக என்னை பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். எனது அண்ணன்கள் நல்ல தயாரிப்பாளர்களாக வர விரும்புவதைப் போல, நான் சிறந்த ஹீரோவாக வளர விரும்புகிறேன். இவ்வாறு அருள்நிதி கூறினார்.இயக்குனர் கணேஷ் விநாயக் கூறும்போது, ‘பத்திரிகை செய்தி ஒன்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. முழுக் கதையும் மதுரையில் நடக்கிறது. அருள்நிதி செல்கிற இடம் எல்லாம் தகராறு வந்துவிடும். அதனால் தான் படத்துக்கு அந்தப் பெயர். அருள்நிதியின் இன்னொரு பரிமாணத்தை இதில் பார்க்கலாம்’ என்றார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்