Your Ad Here

சமந்தாவை துரத்திப்பிடிக்கும் ஆந்திர ஹீரோக்கள்!


 சமந்தா நடிக்கிற எல்லா படங்களுமே ஹிட்டாகி வருவதால், ஆந்திராவில் அவரை வைத்து படமெடுக்கிற படாதிபதிகள் வசூல் மழையில் குளித்துக்கொண்டிருக்கிறார்களாம். அதோடு, சில முன்னணி ஹீரோக்கள் அவரை செண்டிமென்ட் நாயகியாகவே கருதுவதால், கதை கேட்டதுமே சமந்தாவிடம் கால்சீட் பேசுங்கள் என்று முன்மொழிந்து விடுகிறார்களாம்.

இதனால் வேறு நடிகைகளை மனதில் வைத்திருந்தாலும் ஹீரோக்களே சமந்தாவை முன்மொழிவதால் இயக்குனர்களும் சமந்தாவிடம் கால்சீட் கேட்டு அலைகிறார்களாம். அதனால் நாக சைதன்யா, பவன் கல்யாண், மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர் என ஆந்திராவின் மொத்த மெகா ஹீரோக்களும் இப்போது சமந்தாவின் பாக்கெட்டில்தான் இருக்கிறார்களாம்.

இந்த நிலையில், கோடம்பாக்கத்திலும் கோலேச்ச நினைக்கும் சமந்தா, விஜய், சூர்யா நடிக்கும் புதிய படங்களில் கமிட்டாகி விட்டார். இதனால், அடுத்து அவரது கவனம் தமிழ்நாட்டுப்பக்கம் போய் விடுமோ என்று நினைக்கும் ஆந்திர ஹீரோக்கள், முழுநேர தமிழ் நடிகையாகி விடக்கூடாது என்பதற்காக, அடுத்தடுத்து படங்களை கொடுத்து ஆந்திராவிலேயே தடுத்து நிறுத்த முயற்சித்து வருகிறார்களாம்.

இப்படி ஆந்திர ஹீரோக்கள் வலுக்கட்டாயமாக படங்களை கொடுத்து தன்னை சிக்க வைப்பதால், மேற்கொண்டு புதிய தமிழ் படங்களில் நடிப்பது சம்பந்தமான முயற்சிகளைகூட தற்காலிகமாக தள்ளி போட்டுவிட்டார் சமந்தா.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்