Your Ad Here

காவல் நிலையத்தில் ராதா ஆஜர்: போலீசின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறல்


   நடிகை சுந்தரா டிராவல்ஸ் ராதா கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சினிமா தயாரிப்பாளர் பைசூல் என்பவர் மீது புகார் கொடுத்தார். தன்னோடு திருமணம் செய்யாமல் குடித்தனம் நடத்திவிட்டு தனது பணம் நகையை ஏமாற்றி கொண்டு சென்றுவிட்டதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்துமாறு வடபழனி இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ராதா நேற்று வடபழனி காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரை போலீசார் தனி அறையில் வைத்து விசாரித்தனர். அவருடன் அவரது வழக்கறிஞரும் இருந்தார். போலீசர் பைசூலுடன் ராதாவுக்கு இருந்த உறவு பற்றி துருவி துருவி கேட்டனர். தாலி கட்டாமலேயே அவருடன் எப்படி 5 ஆண்டுகள் மனைவியாக வாழ சம்மதித்தீர்கள் என்ற கேள்விக்கு ராதா பதில் சொல்ல முடியாமல் திணறினாராம். வேறு யாருடனாவது உங்களுக்கு காதல் இருந்ததா? என்றும் கேட்டுள்ளனர். சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்ட பிறகு வருமானத்துக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டதாகவும் தெரிகிறது. பெரும்பாலான கேள்விக்கு ராதா பதில் சொல்ல முடியாமல் அழுது கொண்டே இருந்தாக காவல் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதற்கிடையில் தயாரிப்பாளர் பைசூல் ராதா தன்னைப்போலவே பலருடன் குடும்பம் நடத்தினார் என்று கூறுவதோடு. அதற்கான ஆதாரங்களையும் திரட்டி விரைவில் கமிஷனரை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது-. பல ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரா டிராவல்ஸ் பட தயாரிப்பாளர் தங்கராஜ் மீதும் ராதா பாலியல் குற்றச்சாட்டு கூறியது குறிப்பிடத்தக்கது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்