Your Ad Here

விஜயகாந்த் பட டைட்டிலில் நடிக்கிறார் அதர்வா!


  ஏற்கனவே வெளியான ஹிட் படங்களின் டைட்டில்களில் மீண்டும் நடிப்பதில் இப்போதைய ஹீரோக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில், ரஜினி நடித்த மாப்பிள்ளை, நான் மகான் அல்ல, தில்லுமுல்லு உள்பட பல படங்களின் டைட்டில்களில் மீண்டும் சமீபத்தில் படங்கள் வெளிவந்தன. இந்த நிலையில், 30 வருடங்களுக்கு முன்பு விஜயகாந்த் நடித்த ஈட்டி என்ற பட டைட்டிலில் இப்போது ஒரு படம் தயாராகிறது. அப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தை டைரக்டர் வெற்றிமாறன், மைக்கேல் ராயப்பன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிப்பதற்கு மார்க்கெட்டில் இருக்கிற நடிகையாக தேடி வந்தவர்கள், இப்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நாயகியான ஸ்ரீதிவ்யாவை புக் பண்ணியுள்ளனர். பென்சில், வீரதீரசூரன் படங்களில் நடித்து முடித்தும் இந்த படத்திற்கு கால்சீட் கொடுத்திருக்கிறாராம் திவ்யா.

மேலும், விஜயகாந்த் படத்தின் தலைப்பு வைத்திருப்பதால் அப்படத்தின் கதையோடு இப்படத்துக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்று விசாரித்தபோது, தலைப்புதான் ஈட்டியே தவிர இதற்கும், அந்த படத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்கிறார்கள். மேலும், இன்றைய காலகட்டத்திற்கேற்ற கதையில் உருவாகும் ஈட்டி, நல்லதொரு மெசேஜை சொல்லும் விதத்தில் உருவாகிறதாம்.

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தில் உதவியாளராக பணியாற்றிய ரவிபிரகாஷ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் ஜனவரி மாதம் கலந்து கொள்கிறாராம் அதர்வா.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்