Your Ad Here

எனது இசையை விற்று விட்டார் எழில் மீது இமான் குற்றச்சாட்டு


     நீண்ட இடைவெளிக்கு பிறகு எழில் சொந்தமாக தயாரித்து டைரக்ட் செய்த படம் மனம் கொத்தி பறவை. அவரது நண்பர்கள் அம்பேத்குமார், ராஜீவ் மேனன் ஆகியோரும் இணைந்து இந்த படத்தை தயாரித்தனர். இமான் இசை அமைத்திருந்தார். படம் ஓரளவுக்கு ஓடியதும். அதன் கன்னட உரிமையை கன்னட தயாரிப்பாளர் ஒருவருக்கு விற்று விட்டனர்.

உரிமையை வாங்கிய தயாரிப்பாளர் அதில் இமான் பின்னணி இசையையும் பாட்டின் மெட்டுக்களையும் அப்படியே பயன்படுத்தியதோடு "இசை இமான்" என்ற பெயரில் ஆடியோவையும் வெளியிட்டு விட்டார்.

இந்த தகவல் அறிந்த இமான் அதிர்ச்சி அடைந்தார். "என்னிடம் எந்த அனுமதியும் பெறாமல் எனது இசையை தயாரிப்பாளர்கள் கன்னட ரீமேக்கிற்கு விற்றுள்ளனர். இது எனக்கு மிகுந்த கவலையை அளித்துள்ளது. நான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்கிறேன். இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று யோசித்து வருகிறேன்" என்று கூறியுள்ளார்.

"படத்தின் தயாரிப்பாளருக்குதான் படத்தின் இசையும் சொந்தம். அதை அவர் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஒரு படத்தின் ரீமேக் உரிமை என்பது படத்தின் அனைத்து கண்டன்டுகளும் சேர்த்துதான். இதுவரை அதுதான் நடைமுறை. இதற்காக இசை அமைப்பாளரின் அனுமதி தேவையில்லை. மரியாதை நிமித்தமாக வேண்டுமானால் தகவல் தெரிவிக்கலாம். அதுவும் கட்டாயமில்லை" என்கிறது தயாரிப்பு தரப்பு.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்