Your Ad Here

தலைமுடியை இழந்தார் ஜெய்குஹேனி


      மெய்யழகி படத்தில் நடித்துள்ள ஜெய்குஹேனி, நிருபர்களிடம் கூறியதாவது:ஆரோகணம் படத்தில் அறிமுகமான நான், மெய்யழகி படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை 10 கிலோ அதிகரித்தேன். டல் மேக்கப் போட்டுக்கொண்டேன். என் தம்பியாக நடித்த பாலாஜியை கிணற்றில் தள்ளிவிடுவார்கள். அப்போது 170 அடி ஆழம் கொண்ட கிணற்றில்,டூப் போடாமல் நானே ஒரிஜினலாக குதித்து நடித்தேன். அதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் நீச்சல் கற்றுக்கொண்டேன். தமிழ் கற்றுக்கொண்டு நானே டப்பிங் பேசினேன்.

நானும், பாலாஜியும் சிறப்பாக நடித்துள்ளதாக பாராட்டுவதை கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.அடுத்து சார்லஸ் ஷபீக் கார்த்திகா படத்தில் நடிக்கிறேன். இது சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை. என் கேரக்டரை யாராலும் யூகிக்க முடியாது. என் தலையிலிருந்து கால் முட்டி வரை ஒரிஜினல் முடி இருப்பது பிளஸ் பாயின்ட் என்றாலும், எல்லா படத்திலும் ஒரே கெட்டப்பில் தோன்ற பிடிக்காததால், முடியை வெட்டி ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார். கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் ஆர்.டி.ஜெயவேல், பாலாஜி மற்றும் படக் குழுவினர் உடனிருந்தனர்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்