Your Ad Here

ஐஸ்வர்யாராய்-ஜெயாபச்சன் மோதல்?


   மாமியார்-மருமகள் மோதல் என்பது பெரும்பாலான வீடுகளில் நடப்பதுதான். அது இப்போது முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யாராய் வீட்டிலும் வெடித்திருக்கிறது.

1994ல் உலக அழகியாக தேர்வானவர் ஐஸ்வர்யாராய். 1997ல் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், பின்னர் ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் நடித்தார். அதன்பிறகு இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சனுடன் இணைந்து நடித்தபோது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. அதையடுத்து, 2007ல் அவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலானார் ஐஸ்வர்யாராய்.

திருமணத்துக்குப்பிறகும் சினிமாவில் நடித்து வந்த ஐஸ்வர்யாராய், மகள் ஆரத்யா பிறந்த பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு முழுநேர இல்லத்தரசி ஆகியிருக்கிறார். மாமனார் அமிதாப்பச்சன், மாமியார் ஜெயா பச்சன் ஆகியோருடன் இத்தனை ஆண்டுகளும் சந்தோசமாகத்தான் வாழ்ந்து வந்தார். ஆனால், சமீபகாலமாக மாமியார் ஜெயாபச்சன், ஐஸ்வர்யாராயின் விசயங்களில் அதிகமாக தலையிடுகிறாராம். அதன்காரணமாக அவர்களுக்கிடையே வீட்டுக்குள் மோதல் வெடித்த வண்ணம் உள்ளதாம்.

குறிப்பாக, ஐஸ்வர்யாராயின் வரவு-செலவு கணக்குகளைகூட தன்னிடமே ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயாபச்சன் பிடிவாதம் செய்கிறாராம். அவர் போடும் பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்து விட்டால் கேள்வி கேட்கிறாராம். இதனால் இத்தனை நாளும் பொறுமை காத்து வந்த ஐஸ்வர்யாராய், இப்போது தனிக்குடித்தனம் செல்ல கணவர் அபிஷேக்பச்சனை கேட்டுக்கொண்டு வருகிறாராம். இந்த விவகாரத்தினால் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே மனக்கசப்பு உருவாகியிருக்கிறதாம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்