Your Ad Here

அஜீத்தை திருமணம் செய்ய விரும்பும் நடிகை!


பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ப்ரீத்தி தாஸ். தற்போது மறுமுகம், உயிருக்கு உயிராக படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பத்திரிகையாளர்களை அழைத்து பேசிய ப்ரீத்தி, அஜீத்தை திருமணம் செய்வேன் என்ற அதிர்ச்சி ஆசையை வெளியிட்டார். அவர் கூறியதாவது: மும்பையில் மாடலிங் செய்து கொண்டிருந்தபோது ஆடிசன் மூலமாக செலக்ட் ஆகி இப்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். அடுத்து தெலுங்கு, மலையாளப் படங்களில் நடிக்க இருக்கிறேன். நான் மேற்கத்திய கலாச்சாரத்துடன் வளர்ந்த பொண்ணு அதனால் கவர்ச்சி காட்டுவதிலோ, லிப் லாக் முத்தம் கொடுப்பதிலோ தயக்கம் இல்லை. உயிருக்கு உயிராக படத்தில் லிப் லாக் முத்தம் கொடுத்திருக்கிறேன். விதவிதமான கேரக்டர்களில் வித்தியாசமாக நடிக்க ஆசை. அஜீத் சாருடன் நடிக்க ஆசையாக இருக்கிறேன். அவரை கல்யாணம் பண்ணிக்கொள்ளும் ஆசைகூட இருக்கிறது. ஆனால் அவருக்குத்தான் கல்யாணமாகி விட்டதே. தமிழ்ல எல்லா ஹீரோக்களோடும் நடிக்க ஆவலாக இருக்கிறேன். அழகா இருக்கேன். நன்றாக நடிப்பேன், தமிழ், இந்தி, மராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் என 5 மொழிகள் பேசத் தெரியும் என்றார் ப்ரீத்தி தாஸ்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்