Your Ad Here

ஓவியா படத்துக்கு பட்ஜெட் எகிறியது கைபிசையும் ஜி.வி.பிரகாஷ்


  ஓவியா படத்துக்கு பட்ஜெட் அதிகரித்துவிட்டது என தயாரிப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கைபிசைந்து நிற்கிறார். இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் முதல் படம் மதயானைக் கூட்டம். விக்ரம் சுகுமாரன் இயக்குகிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். இப்படம் பற்றி தயாரிப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியது: தேனி பகுதியில் நடக்கும் கதை. செய்முறை என்ற வழக்கம் தேனி பகுதியில் இப்போதும் நிகழ்கிறது. துக்க நிகழ்ச்சிக்குகூட பணம் செய்முறை செய்யப்படுகிறது.

அதை பின்னணியாக கொண்டு அழகான காதல் கதையை உள்ளடக்கிய படமாக இது உருவாகி உள்ளது. புதுமுகம் கதிர் ஹீரோ. ஜோடியாக ஓவியா நடிக்கிறார். தேனி பகுதியில் கேரள பெண்கள் நிறையபேர் நர்சிங் படிக்கிறார்கள். படத்தில் ஹீரோயின் நர்சிங் படிப்பதால் மலையாளம் பேச தெரிந்த ஓவியாவை ஒப்பந்தம் செய்தோம். இப்படத்துக்கு நிர்ணயித்த பட்ஜெட்டைவிட கூடுதல் செலவு ஆனதா? என்கிறார்கள்.

ஆமாம் இப்படத்துக்கு பட்ஜெட்டை தாண்டி செலவாகி இருக்கிறது. செலவு அதிகரித்தால் கைபிசையும் நிலை வருவது சகஜம்தான். ஆனால் செய்த செலவு முழுவதும் படத்தில் நிச்சயம் தெரியும். பட்ஜெட் அதிகரித்து விட்டதால் பயப்பட மாட்டேன். தொடர்ந்து படங்கள் தயாரிப்பேன். இவ்வாறு ஜி.வி.பிரகாஷ்குமார் கூறினார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்