Your Ad Here

18வது மாடியில் சண்டை-விக்ரம் பிரபு சிலிர்ப்பு


  யுடிவி மோஷன் பிக்சர்ஸ், திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா இணைந்து தயாரிக்கும் படம், இவன் வேற மாதிரி. விக்ரம் பிரபு, சுரபி ஜோடி. ஒளிப்பதிவு, சக்தி. இசை, சத்யா. பாடல்கள்: நா.முத்துக்குமார், விவேகா, மணி அமுதவன். இயக்கம், எங்கேயும் எப்போதும் எம்.சரவணன். படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் விக்ரம் பிரபு கூறியதாவது:கும்கி ரிலீசான பிறகு நான் நடிக்கும் இப்படம், ஆக்ஷன் கதையாக உருவாகியுள்ளது. அமெரிக்காவில் நான் சினிமா சம்பந்தமாக படித்தபோது கதை, திரைக்கதையைப் பற்றித்தான் அதிகமாக விவாதிப்பார்கள்.

 இப்படத்தில் அந்த இரண்டும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். எல்லோராலும் செய்ய முடியாத ஒன்றை அல்லது செய்ய மறந்த ஒன்றை ஹீரோ துணிச்சலுடன் செய்ய முற்படுவதுதான் கதை. படூர் அருகிலுள்ள கட்டிடத்தின் 18வது மாடியில் கிளைமாக்ஸ் காட்சி படமானது. லிப்ட் கிடையாது. 30 நாட்களுக்கு மேல் அங்குதான் ஷூட்டிங் நடந்தது. தினமும் 18வது மாடிக்கு நடந்தே சென்று, பலத்த காற்றுக்கு மத்தியில் நின்று, சண்டைக் காட்சியில் நடித்தது திரில்லிங்கான அனுபவமாக இருந்தது. வில்லன் வம்சியுடன் நான் மோதும் காட்சிகளில், இரண்டு பேருக்கும் பலத்த அடிபட்டது.

வலியைப் பொருட்படுத்தாமல் நடித்து முடித்தோம்.சுரபி உட்பட அனைவருக்கும் பட அலுவலகத்தில் முன்கூட்டியே ஒர்க் ஷாப் நடந்தது.  பிரபு சாலமன்&இமான் கூட்டணி போல சரவணன்&சத்யா கூட்டணி என்று சொல்லலாம். இசையும், ஒளிப்பதிவும் பெரிய பலமாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். யுடிவி தனஞ்செயன், சுபாஷ் சந்திரபோஸ், எம்.சரவணன், சுரபி, கணேஷ் வெங்கட்ராம், வம்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்