Your Ad Here

ஜி.வி.பிரகாஷுக்குகிடைத்த 'டிப்ஸ்'


     இசையமைப்பாளர், ஜி.வி.பிரகாஷ் குமார், திருமணத்திற்கு பின் 'பென்சில்' என்ற படம் மூலம் ஹீரோவாகி விட்டார். அதுவும், 'நடிகைகளுடன் முத்தக் காட்சி மற்றும் அதிக நெருக்கமாக நடிக்கக் கூடாது' என்ற மனைவியின் நிபந்தனைகளுடன் களமிறங்கியுள்ளார்.படப் பிடிப்பின்போது, ஜி.வி.பிரகாஷின் நடிப்பை பார்த்த பலரும், 'முதல் படம் என்ற பயமே இல்லாமல், அனுபவம் வாய்ந்த ஹீரோ மாதிரி நடிக்கிறீர்களே' என, பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆனால், ஜி.வி.பிரகாஷோ, 'என் நடிப்புக்கு பாராட்டு கிடைக்கிறதென்றால், நான் மட்டும் காரணமல்ல. ஏற்கனவே சிலரிடம் நடிப்புப் பயிற்சி பெற்ற எனக்கு, விஜய், சிம்பு ஆகிய இரண்டு நடிகர்களுமே நிறைய நடிப்பு டிப்ஸ் கொடுத்தனர். அதனால், இந்த பாராட்டு எனக்கு உறுதுணையாக இருந்த அனைவரையுமே சாரும்' என்கிறார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்