Your Ad Here

சினிமாவில் நடிக்க தோல் சிகிச்சை செய்து கொண்டார் ஜி.வி.பிரகாஷ்


      இளம் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் மதயானைக்கூட்டம் என்ற படத்தை தயாரிக்கிறார். பென்சில் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சினிமாவில் நடிப்பதைத் தொடர்ந்து அவர் தோல் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
பென்சில் படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (நவம்பர் 23) நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த ஜி.வி.பிரகாஷ் தன்னை புகைப்படமோ, வீடியோவோ எடுக்க அனுமதிக்கவில்லை. "சினிமாவில் நடிப்பதற்காக சின்னதாக ஒரு ஸ்கின் ட்ரிட்மெண்ட் எடுத்துக்கிட்டிருக்கேன். அது இன்னியோட முடியுது நாளைக்கு உங்களுக்கு பேட்டியும், பைட்சும் தருகிறேன்" என்று கூறினார்.
ஜி.வி.பிரகாசுக்கு லைட்டிங் அலர்ஜி இருப்பதாகவும், (அதிகமான வெளிச்சம் பட்டால் தோல் சிவந்து தடிப்பு ஏற்படுவது) சினிமாவில் நடிக்கும்போது அதிகப்படியான லைட்டிங்கை தாங்க வேண்டியது இருக்கும் என்பதால் அதற்கான எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள கடந்த ஒரு மாதமாக அவர் டயட்டில் இருந்து ட்ரீட்மெண்ட் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்