Your Ad Here

ரஜினியுடன் மோதத்தயாராகி விட்ட விஜய்-அஜீத்

ரஜினி நடித்து வந்த கோச்சடையான் பட வேலைகளில் சில ஆண்டுகளாகவே நடந்து வந்தது. எப்போதோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட அப்படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதாக திடுதிப்பென்று அறிவித்து விட்டனர்.

இதனால் அதற்கு முன்பே பொங்கல் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்த விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் படங்களின் ரிலீஸ் தேதி மாற்றப்படுமா? என்று பார்த்தால் அப்படி நடக்கவில்லை. பொங்கல் ஜல்லிக்கட்டில் களமிறங்குவதில் எந்த மாற்றமும் இல்லை என்பதை மீண்டும் அறிவித்து விட்டனர்.

இதற்கிடையே கமலும் விஸ்வரூபம்-2 படத்தை ஜனவரி 26-ல் வெளியிடுவதாக கூறியுள்ளார். இதனால், தியேட்டர்கள் பிடிப்பதில் பெரிய தள்ளுமுள்ளுவே நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், கமலை யாருமே போட்டியாக நினைக்கவில்லை. பொங்கலுக்கு ரிலீசாகும் ரஜினி, விஜய், அஜீத் படங்களுக்கிடையேதான் பலத்த போட்டியே நடக்கிறது.

மேலும், பல வருடங்களுக்கு பிறகு வெளியாகிற ரஜினி படம் கோச்சடையான் என்றபோதும், அப்படத்தில் ரஜினி நேரடியாக நடிக்காமல் அனிமேஷன் உருவிலேயே நடித்திருப்பதால் அவர் படம் மீதான பயம் பெரிதாக இல்லையாம்.

அதனால்தான் அந்த படத்தினால் தங்கள் படத்துக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை என்று வீரம், ஜில்லா தரப்பினர் தைரியமாக களத்தில் குதிக்கிறார்களாம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்