Your Ad Here

மும்பையில் முகாமிடும் கோலிவுட் ஹீரோக்கள்!


   ஒரு காலத்தில் ஸ்டுடியோக்களில் முடங்கிக்கிடந்த தமிழ் சினிமாவை, வயல் வெளிகளுக்கு கொண்டு வந்தவர் பாரதிராஜா. அவரைத் தொடர்ந்து படிப்படியாக மற்ற இயக்குனர்களும் வெளிப்புறப் படப்பிடிப்புகளில் இறங்கினர். அந்த சமயத்தில் பொள்ளாச்சி பகுதிகளில் பசுமை ஏரியாக்கள் நிறைய இருந்ததால், பெரும்பாலான தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் அங்குதான் நடைபெற்று வந்தன.

அதையடுத்து, மதுரையை களமாகக்கொண்ட கதைகளை அந்த பகுதியிலேயே பாரதிராஜா படப்பிடிப்பு நடத்தியதால், கோலிவுட்டின் கவனம் மதுரைப்பக்கமும் திரும்பியது. அங்கு படமாக்கப்பட்ட பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றதால், செண்டிமென்டாக மதுரையில் ஒரு நாளாவது படப்பிடிப்பு நடத்தி விட வேண்டும் என்று ஒவ்வொரு டைரக்டர்களும் நினைத்தனர். அது இப்போது வரை தொடர்ந்து வருகிறது.

ஆனால், இடையிடையே மும்பையிலும் சில படங்கள் படமாகி வந்தன. அது இப்போது அதிகரித்து வருகிறது. விஜய்யின் தலைவா, அஜீத்தின் ஆரம்பம் படங்கள் மும்பை கதைக்களத்திலேயே உருவானதால் இப்போது லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படமும் மும்பையை கதைக்களமாகக் கொண்டு உருகிறது. அதனால் படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை மும்பையில் முகாமிட்டே படமாக்கி வருகின்றனர்.

இதையடுத்து கெளதம்மேனன் உள்பட சில முன்னணி இயக்குனர்களும் மும்பையில் படப்பிடிப்பு நடத்த லோகேஷன் பார்த்திருக்கிறார்களாம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்