Your Ad Here

எழில் இயக்கத்தில் விக்ரம்பிரபு


  கும்கி  வெற்றியைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் ‘இவன் வேற மாதிரி’. கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளி பிறகு இந்தப் படம் திரைக்கு வரவிருக்கிறது.

முதல் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் விக்ரம் பிரபுவை தேடி வாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளன. தற்போது அரிமா நம்பி, சிகரம் தொடு படங்களில் நடித்துவரும் இவர், அடுத்ததாக ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

இவைதவிர, கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார் விக்ரம் பிரபு. இந்தப்படத்திற்கு ‘தலப்பாக்கட்டி’ என பெயர் வைத்துள்ளார்கள். ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப்படத்தில் நவீன் சந்திரா, ரூபா மஞ்சரி, தம்பிராமையா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து எழில் இயக்கவுள்ள புதிய படத்திலும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விக்ரம் பிரபு. அனேகமாக இந்தப்படங்களின் படப்பிடிப்பு 2014 ஜூன் மாதத்திற்கு மேல ஆரம்பிக்கும் என தெரிகிறது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்