Your Ad Here

கன்னட ரீமேக்கைப் பார்த்து அதிர்ச்சியடைந்த டி.இமான்!


 டி.இமான் இசையில் எழில் இயக்கிய, படம்தான் ‘மனம் கொத்தி பறவை’.தமிழில், சிவகார்த்திகேயன், ஆத்மியா நடித்து வெளிவந்த ‘மனம் கொத்திப் பறவை’ படம் கன்னடத்தில் ‘அஞ்சாதகாடு’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியாகியுள்ளது.

இதில், ‘மனம் கொத்தி பறவை’க்காக டி.இமான் இசை அமைத்திருந்த பாடல்களின் ட்யூன்களை அப்படியே பயன்படுத்தி, படத்தின் சிடி மற்றும் விளம்பரங்களில் டி.இமான் பெயரை இடம் பெற செய்திருக்கிறார்கள்.

இதனை கண்ட இசையமைப்பாளர் டி. இமான் அதிர்ச்சியடைந்துள்ளார். ஆனால் இது தொடர்பாக இமானிடம், ‘மனம் கொத்தி பறவை’ படம் சம்பந்தப்பட்டவர்களோ, கன்னட ரீ-மேக் உரிமையை பெற்றவர்களோ முறையாக அனுமதி பெறவில்லையாம்.

இது பற்றி டி. இமான் கூறுகையில், “மனம் கொத்திப் பறவை’யில் கன்னட ரீமேக்கைப் பார்த்து அதிர்ச்சியாக உள்ளது. ஒரு படத்தின் ரீ-மேக் உரிமையை வேறொரு மொழியில் ரீ-மேக் செய்வதற்கு வழங்கும் அதிகாரம் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு உண்டு.

ஆனால் படத்தின் மியூசிக் கம்போசர் என்ற முறையில் ரீ--மேக் செய்கிற படத்தில் அதே ட்யூன்களை பயன்படுத்தி, அதே இசை அமைப்பாளரின் பெயரை பயன்படுத்தும்போது அது சம்பந்தப்பட்ட இசை அமைப்பாளரிடம் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்!அப்படி என்னிடம் அனுமதி பெறாமல் என் பெயருடன் வெளியாகிற இந்த கன்னட படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்று அதிரடியாக தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்