Your Ad Here

ஹன்சிகாவைத் தொடர்ந்து அமலாபாலுடன் டூயட் பாடுகிறாராம் சிவகார்த்திகேயன்.


   வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மான்கராத்தே படத்தில் ஒப்பந்தமானார் சிவகார்த்திகேயன். அந்த படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார் என்ற செய்தி கோலிவுட்டில் வெளியானபோது பல ஹீரோக்களுக்கு பலத்த அதிர்ச்சி. இன்னும் நமக்கே அந்த அரிய வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்குள் எப்படி சிவகார்த்திகேயனுககு கிடைத்தது என்று உறைந்து போய் நின்றார்கள்.

இப்படி பல ஆச்சர்யம், அதிர்ச்சிகளுக்கு நடுவே ஹன்சிகாவுடன் ஹாயாக டூயட் பாடிக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் அவரை நெருங்க தயங்கி தயங்கி நின்றவர். போகப்போக பின்னி பெடலெடுத்து விட்டாராம். குறிப்பாக ரொமான்ஸ் காட்சிகளில் இதுவரை நடித்த படங்களில் இல்லாத அளவுக்கு செம மூடில் நடித்துள்ளாராம். கூடவே ஹன்சிகாவும் அவருக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறாராம். அதனால் அவர்களின் ரொமான்ஸ் காட்சிகள் எதிர்பார்த்ததை விடவும் கிக்காக வந்துள்ளதாம்.

இந்த நிலையில், அடுத்து முன்னணி ஹீரோயினிகளுடன் மட்டுமே நடிப்பேன் என்ற புதிய கொள்கையை பிரகடனப்படுத்தியிருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்து தனுஷ் தயாரிப்பில் நடிக்கும் டணார் என்ற படத்தில் அமலாபாலுடன் டூயட் பாடுகிறாராம். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் வேடத்தில் நடிக்க, அவரை சுற்றி சுற்றி வந்து காதலிக்கும் வேடத்தில் அமலாபால் நடிக்கிறாராம்.

அதுமட்டுமின்றி, இப்படத்தில் கூடுதல் கவர்ச்சி சேவை புரியவும் தயாராகி விட்ட அமலாபால், கலகலப்பு, கிளுகிளுப்பு என இரண்டையும் கலந்துகட்டி அடிக்கப்போகிறாராம்

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்