Your Ad Here

அனுஷ்காவின் தத்துவம்! எதிர்பார்ப்பு அதிகமாக இல்லையென்றால் ஏமாற்றமும் அதிகமாக இருக்காது!


   ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, தங்களுக்கு வரவேண்டிய வாழ்க்கைத்துணை பற்றி நிறைய கனவுடன்தான் இருப்பார்கள். ஆனால், அனுஷ்காவிடம், வருங்கால கணவர் எப்படியிருக்க வேண்டும் என்ற கனவில் இருக்கிறீர்கள்? என்று கேட்டால், எனக்கு அதுபற்றி எந்தவிதமான கனவும் இல்லை என்கிறார்.

மேலும், சினிமாவுக்கு வந்ததில் இருந்தே நான் பிசியாகத்தான் நடித்துக்கொண்டிருக்கிறேன். அதனால் திருமணம் பற்றி நான் இன்னும் யோசிக்கவே ஆரம்பிக்கவில்லை. அதனால் வருங்கால கணவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் நான் இன்னும் கனவு காணத்தொடங்கவில்லை என்று சொல்லும் அனுஷ்கா, எந்த விசயமாக இருந்தாலும், அதன்மீது அதிக எதிர்ப்பார்ப்பு வைக்க மாட்டாராம். காரணம், பெரிய அளவில் அவர் எதிர்பார்த்த பல விசயங்கள் அவர் நினைத்தபடி நடக்கவில்லையாம்.

அதனால், கணவர் விசயத்திலும் பெரிய அளவில் கற்பனை கோட்டை கட்டி வைத்து, வரப்போகிறவர் அந்த அளவுக்கு இல்லையென்றால் ஏமாற்றமாகி விடும் என்பதால், எதிர்கால கணவர் பற்றி எதிர்பார்ப்பே இல்லாமல் இருப்பதாக சொல்லும் அனுஷ்கா, எதிர்பார்ப்பு அதிகமாக இல்லையென்றால் ஏமாற்றமும் அதிகமாக இருக்காது என்றும் தத்துவ முத்துக்களை கொட்டுகிறார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்