Your Ad Here

6 தங்கைகளுக்கு அக்காவாக பார்வதி


     நடிகைளில் பூ பார்வதி வித்தியாசமானவர். சினிமாவுக்கு நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆனபோதும் இதுவரை அவர் நடித்துள்ள படங்கள் 7 தான். பார்வதி ஒரு படத்தில் நடித்தால் அந்த படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ அந்த படம் நல்ல படமாக இருக்கும். தமிழில் பூ படத்திற்கு பிறகு சென்னையில் ஒரு நாள் படத்தில் நடித்தார். அதற்கு பிறகு மரியான் படத்தில் நடித்தார். அவர் நடித்த 3 படங்களுமே எல்லோராலும் பாராட்டப்பட்டது.

இப்போது பார்வதி மலையாளத்தில் ஒரு படத்தில் 6 தங்கைகளுக்கு அக்காவாக நடிக்கிறார். அம்மா வயசுள்ள நடிகைகளே நடிக்க தயங்கிய கேரக்டரில் துணிச்சலுடன் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் பார்வதி. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் பிருத்திவிராஜ், கேரள மாநிலம கோட்டையத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகிறதாம். 6 தங்கைகளையும் தனியொரு மனுஷியா எப்படி கரை சேர்க்கிறார் என்கிற கதை. தன் காதலை மறைத்து தன் தங்கைகள் காதலுக்காக போராடும கதை. மதம் மாறி திருமணம் செய்து கொள்ளும் தன் தங்கைக்கு வரும் பிரச்னைகளை இவர் கையாள்வதுதான் பரப்பரப்பான திரைக்கதையாம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்