Your Ad Here

'பத்திரிகையாளராக ஆசைப்பட்டேன்' - டாப்சி


      'வெள்ளாவி' டாப்சிக்கு, தொடர்ந்து படங்கள் கிடைக்கவில்லை. இதனால், இந்தி, தெலுங்கில் கவனம் செலுத்திய அவர், சற்று இடைவெளிக்கு பின், 'ஆரம்பம்' படத்தின் மூலம், மீண்டும் தமிழக்கு வந்துள்ளார். இந்த அனுபவம் குறித்து, அவர் கூறுகையில்,'என் முதல் படமான ஆடுகளத்தில், தமிழ் ரசிகர்கள், சிறப்பான வரவேற்பு அளித்தனர். இப்போது, மீண்டும் தமிழுக்கு வந்துள்ளேன்.

தமிழ் ரசிகர்களின் ஆதரவு, தொடர்ந்து கிடைக்கும் என, நம்புகிறேன்' என்கிறார். 'எப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க ஆசை' என, அவரிடம் கேட்டபோது, 'படித்து முடித்தவுடன், ஏதாவது ஒரு பத்திரிகையில் சேர்ந்து, பிரபலமான பத்திரிகையாளராக வேண்டும் என, ஆசைப்பட்டேன். ஆனால், மாடலிங், சினிமா என, என், வாழ்க்கை பாதை, தடம் மாறி விட்டது. ஆனாலும், 'ஆரம்பம்' படத்தில், பத்திரிகையாளர் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதனால், மனதுக்குள் தேக்கி வைத்திருந்த ஆசையையெல்லாம், வெளிப்படுத்தி, அந்த கேரக்டரில், அனுபவித்து நடித்தேன். நிறைவேறாத ஆசையை, இப்படியாவது நிறைவேற்றுவோமே என்ற, ஆர்வம் தான், இதற்கு காரணம்' என, மனம் திறக்கிறார், டாப்சி.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்