பொங்கலுக்கு கோச்சடையான் ரிலீஸ்
ரஜினிகாந்த் நடித்த "கோச்சடையான்' திரைப்படம் அடுத்த ஆண்டு (2014) ஜனவரி மாதம் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக உள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
"கோச்சடையான்' என்ற தமிழ் மன்னரின் வாழ்க்கையைத் தழுவி சாகசங்கள் நிறைந்ததாக உருவாக்கப்பட்டுள்ள படம் "கோச்சடையான்'. ஈராஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், தந்தை - மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார்.
தீபிகா படுகோனே, ஷோபனா ஆகியோர் கதாநாயகிகளாகவும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், சரத்குமார், ஆதி, ருக்மணி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் மேற்பார்வையில் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வைரமுத்து உள்ளிட்டோர் பாடல்களை எழுதியுள்ளனர். பல மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் டப்பிங் மற்றும் கிராஃபிக்ஸ் உள்ளிட்ட இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
கிராபிஃக்ஸ் தொழில்நுட்பத்துக்கு படத்தில் அதிக முக்கியத்துவம் இருந்ததால், குறிப்பிட்ட நேரத்தில் படத்தின் பணிகள் முடிவடையாமல் இருந்தன. இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி.யின் குரலில் படத்தில் இடம் பெறும் "எங்கே போகுதே வானம்....' என்ற பாடலும் படத்தின் டீஸரும் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
விஜய் நடிக்கும் "ஜில்லா', அஜித் நடிக்கும் "வீரம்' ஆகிய படங்களும் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளன.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.
