Your Ad Here

வில்லா ( பீட்சா 2 ) விமர்சனம்..!


      வழக்கமான ஹீரோயிசப் படங்களை எடுக்காமல், வித்தியாசமான முயற்சிகளைத் தரும் குமாரின் தயாரிப்பில் வந்திருக்கும் படம். பீட்சா-2 என்றுவேறு விளம்பரப்படுத்திவிட, ஓரளவு நல்ல எதிர்பார்ப்பு படத்திற்கு. பீட்சா ஒரு இன்பமான அவஸ்தை. உள்ளே உட்காரவும் பயம் வெளியே ஓடமுடியாதபடி சுவாரஸ்யம் என்று கலந்துகட்டி அடித்தார்கள். மீண்டும் அதே ஃபீலிங் கிடைத்ததா என்றால்..

எழுத்தாளர் ஆகும் கனவில் இருக்கும் ஹீரோ அசோக், அப்பா நாசரின் வற்புறுத்தலால் பிசினஸில் இறங்கி எல்லா சொத்தையும் அப்பாவையும் இழக்கிறார். அதன்பிறகு நாசருக்கு பாண்டிச்சேரியில் ஒரு பங்களா இருப்பது தெரியவர, அங்கே போகிறார். அந்த பங்களாவில் அப்பா வரைந்த ஓவியங்கள் கிடக்கின்றன. அதில் உள்ளபடியே சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கிறது. பற்றி எரியும் பங்களாவில் அசோக் இறப்பது போல் இருக்க, அதிலிருந்து அவர் தப்பித்தாரா இல்லையா என்பதே கதை.

உரிச்சா….: எதைச் சொன்னாலும் சஸ்பென்ஸ் போய்விடும் என்பதால், மொட்டையாகப் பேசுவோம்….

ஒரு திகில் படத்திற்கே உரிய நல்ல திரைக்கதை அமைப்பு. பின்னால் ஷாக் கொடுக்கும் விஷயங்களை, முதலில் வசனங்களிலும் காட்சிகளிலும் பொதித்து வைத்திருக்கிறார்கள். படம் மூவ் ஆகும்போது, ஒவ்வொரு பழைய விஷயமும் புது அர்த்ததுடன் திகில் ஏற்றுவது அழகு.


     முதல் பாதி ஸ்லோவாகச் செல்கிறது. எல்லா அடிப்படை விஷயங்களையும் நமக்குச் சொல்லி, பெயிண்டிங்கை ஹீரோ பார்ப்பதற்குள் 45 நிமிடங்கள் படம் ஓடிவிடுகிறது. பீட்சாவில் இண்டர்வெல் விடும்போதே அலறிக்கொண்டு ஆசுவாசப்படுத்திக்கொள்ள, எல்லாரும் வெளியே ஓடினார்கள். இங்கே திகில் ஆரம்பிப்பதே இண்டர்வெல் நேரத்தில் தான் என்பது பெரும்குறை.

ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் பெர்ஃபக்சனும் அக்கறையும் நம்மைக் கவர்கிறது. ஒளிப்பதிவாகட்டும், இசையாகட்டும், ஆர்ட் டைரக்சனாகட்டும், அவ்வளவு நேர்த்தி. சமீபகாலமாக ஏனோதானோ படங்களைப் பார்த்து, வெறுத்த நமக்கு அது பெரும் ஆறுதல்.

பீட்சா-2 என்று சொன்னதால், அதே மாதிரி ட்விஸ்ட்டை எதிர்பார்த்திருக்க, இங்கே வேறுவகையான ட்விஸ்ட்கள் கிளைமாக்ஸில் வெடிக்கின்றன. ஆனால் அவை அணுகுண்டாக இல்லாமல், லட்சுமி வெடி ரேஞ்சுக்கு இருப்பதால் முழு திருப்தி இல்லை. கிளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட், அந்த ட்விஸ்ட்டுக்கு ஒரு ட்விஸ்ட் என்று சொன்னமுறை நன்றாக இருந்தாலும், மெயின்மேட்டருக்கு ட்விஸ்ட் இல்லாமல் போனதால் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி இல்லை.

கிறிஸ்டோபர் நோலனின் தி ப்ரஸ்டீஜ் ஞாபகம் வரும் அளவிற்கு, ஆரம்ப காட்சிகளும் கிளைமாக்ஸும். (காப்பி இல்லை மக்கா..தப்பா புரிஞ்சிக்காதீங்க..திரைக்கதையில் சில காட்சிகளின் ஸ்டைல் அப்படி.)

பீட்சா-2 என்று விளம்பரப்படுத்தியது நல்ல ஓப்பனிங்கை படத்திற்கு கொடுத்திருக்கலாம். ஆனால் அதனுடன் கம்பேர் செய்து நாம் அதிருப்தியடைவதால், அந்த விளம்பரமே படத்திற்கு எதிரியாகிறது. பீட்சாவை மறந்துவிட்டுப் பார்த்தால், நல்ல முயற்சி எனலாம்.

அசோக் செல்வன்:

கதைப்படி முதல் சீனிலேயே இவருக்கு தொல்லைகள் ஆரம்பித்துவிடுவதால், படம் முழுக்க சீரியஸாகவே வரவேண்டிய நிலைமை. அலட்டல் இல்லாத, அழுத்தமான நடிப்பு. நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால், இன்னொரு விஜய் சேதுபதியாக வரலாம்.

சஞ்சிதா:

     இந்த பெண் பெரிய அழகி இல்லை தான். ஆனாலும் நடிப்பில் பின்னுகிறார். கண்களில் காட்டும் எக்ஸ்பிரசன்ஸும், பாடி லாங்குவேஜும், பாடி ஸ்ட்ரக்சரும் அழகு! சூது கவ்வும் படத்திலேயே நம் மனதைக் கவ்வியவர், இதிலும் அப்படியே..!

சொந்த-பந்தங்கள்:

நாசருக்கு வித்தியாசமான ரோல் தான். முதல் காட்சியிலே செத்துப்போகிறார். ஃபோட்டோவிலும் கோமா ஸ்டேஜ்ஜிலுமே பெரும்பாலான பகுதி போகிறது. ஆனாலும் அந்த அப்பா கேரக்டருக்கு தர வேண்டிய இமேஜை, கரெக்டாகக் கொடுக்கிறார். அதே போன்றே பொன்ராஜாக வரும் நடிகரின் நடிப்பு, மிக இயல்பு. ஒரு பெயிண்டராக, சாமானியனாக அவர் பேசும்விதம் நடிப்பென்று சொல்ல முடியாது. அருமையான தேர்வு.

நெகடிவ் பாயிண்ட்ஸ் : – பீட்சா படத்தை இதற்கு இழுத்தது – பீட்சா அளவிற்கு திகில் காட்சிகள் இல்லாதது – பியானோவிற்குள் சாவியை குழந்தை போடுவதாக ஒரு காட்சி, இன்னொரு காட்சியில் நாசர் போடுவதாக..குழப்பம் எனக்கா, இயக்குநருக்கா என்று தெரியவில்லை. – மெதுவாக நகரும் முதல்பாதி – மெயின் மேட்டரை, உண்மை என்றே முடித்தது பாஸிடிவ் பாயிண்ட்ஸ்: – இயக்குநர் தீபன் சக்கரவர்த்தியின் நேர்த்தியான இயக்கம் – பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே எடுத்து, திகிலைக் கூட்டிய ஒளிப்பதிவு (தீபக் குமார் பாடி) – திரைக்கதையில் எல்லா முடிச்சையும் குழப்பாமல் ஒவ்வொன்றாக அவிழ்த்தது – குடும்பத்துடன் பார்க்கும்படி படத்தை டீசண்டாக எடுத்தது. – அட்டகாசமான ஆர்ட் டைரக்சன்..அந்த பங்களாவை கதைக்கேற்றபடியும், கிளைமாக்ஸ் எஸ்.ஜே. சூர்யா காட்சிக்கு ஏற்றபடி மாற்றியது அருமை. பார்க்கலாமா? : தாராளமா பார்க்கலாம். (பீட்சாவை மறந்தால்..!) ரேட்டிங் – 2.5 / 5   - செங்கோவி.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்