Your Ad Here

வெளிநாட்டு ஷூட்டிங்கில் அஜீத் படக்குழு பாதிப்பு


       வெளிநாட்டில் ஷூட்டிங்கில் பங்கேற்ற அஜீத் பட குழுவினர் கண்ணில் அலர்ஜி ஏற்பட்டு அவதிப்பட்டனர். துபாயில் ஆரம்பம் பட ஷூட்டிங்கில் பங்கேற்ற அஜீத் கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் சுவிட்சர்லாந்தில் சமீபத்தில் நடந்தது.

இதில் அவரது பட குழுவினர் பாதிப்புக்குள்ளானார்கள். இதுபற்றி சிவா கூறும்போது,சுவிட்சர்லாந்து ஷூட்டிங்கின்போது ஹாலோஜென் மற்றும் சக்தி வாய்ந்த விளக்குகள் பயன்படுத்தப்பட்டது. இதில் பங்கேற்று பணி யாற்றியவர்களுக்கு அந்த வெளிச்சத்தை பார்த்து வேலை செய்வதில் சிரமம் ஏற்பட்டது.

ஒரு வழியாக சமாளித்து ஷூட்டிங் முடித்துவிட்டு இரவு படுக்கச் சென்றபோது அனைவருக்கும் கண்ணில் உறுத்தல் ஏற்பட்டது. இதுபற்றி ஹீரோ அஜீத்துக்கு தகவல் சொல்லப்பட்டது. மறுநாள் அதிகாலை யில் எழுந்த அஜீத் ஒவ்வொருவரின் அறைக்கும் சென்று கண் எரிச்சலில் பாதித்தவர்களுக்கு சொட்டு மருந்து ஊற்றினார்.

அதன்பிறகு பட குழுவினர் பிரச்னையிலிருந்து மீண்டனர். தொடர்ந்து ஷூட்டிங்கில் பங்கேற்றனர். அன்றுமுதல் அஜீத்தை நான் டாக்டர் என்று செல்லமாக அழைக்கிறேன் என்றார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்