Your Ad Here

ஜெய் ஹோ - ஏ.ஆர்.ரஹ்மானை பற்றிய படம்!!


    கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை சாதை படைத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை பற்றி உமேஷ் அகர்வால் ஒரு படம் உருவாக்கியிருக்கிறார். ஆஸ்கர் நாயகனை பற்றிய இந்தப்படம் பொருத்தமாக ''ஜெய்ஹோ'' (அவருக்கு ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மலினியர் படத்தில் வரும் பாட்டு) என்று பெயரிடப்பட்டிருக்கிறது. கோவா திரைப்பட விழாவை ஒட்டி நடக்கும் பிலிம் பஜாரில் இது காட்டப்பட்டது. ரஹ்மானுடன் ஐந்து கண்டங்களுக்கும் பயணம் செய்து அவரது இசை நிகழ்ச்சிகள், இங்கிலாந்தில் ஸ்டுடியோவில் பணி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் அவர் இசை அமைப்பது, இயக்குனர் டோனி போயெல், சேகர் கபூர், தயிஷ் கெய் போன்ற பிரபலங்கள் ரஹ்மானைப்பற்றி பேசுவது எல்லாம் இடம் பெறுகின்றன. ரஹ்மானும், இதில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அனிர்பன் பட்டாச்சார்யா எழுத்தில், ராஜீவ் மெஹோத்ரா இசையில் இந்தப்படம் உருவாகியிருக்கிறது.
எல்லாம் சரி, திரைப்பட உலகிற்கு ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்திய இயக்குனர் மணிரத்தினத்தினை இதில் பேச வைத்திருக்க வேண்டாமா.?

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்