Your Ad Here

கமல் ஹாசனின் இளைய மகள் அக் ஷராவும் நடிக்க வருகிறார்


   கமல் ஹாசனின் இளைய மகள் அக் ஷரா, தன் மூத்த சகோதரி, ஸ்ருதியைப் போல், விரைவில் சினிமாவில் நடிக்கப் போவதாக, கடந்த சில மாதங்களாகவே, தொடர்ந்து செய்திகள் வெளியாகின. அப்போதெல்லாம், அக் ஷரா தரப்பிலிருந்து, அதற்கு மறுப்பு வெளியானது. 'அக் ஷராவுக்கு, நடிப்பை விட, படம் இயக்குவதில் தான், ஆர்வம் அதிகம். பிரபல பாலிவுட் இயக்குனர் ஒருவரிடம், உதவியாளராக இருக்கிறார். எனவே, அவர் நடிக்க மாட்டார்' என, கூறப்பட்டது. ஆனால், தற்போது, அவர் நடிக்கப் போவதாக, மீண்டும் செய்திகள் வெளியாகியுள்ளன. 'பா, சீனிகம்' ஆகிய படங்களை இயக்கிய பால்கி, இயக்கப் போகும் இந்தி படத்தில், தனுசுக்கு ஜோடியாக, அக் ஷரா நடிக்கப் போகிறாராம். இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாகவும், விரைவில், படப் பிடிப்பு துவங்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்