Your Ad Here

சினிமா இல்லாமல் யாரும் வாழ முடியாது - மிஷ்கின் பேச்சு


   கே.ஆர்.கே மூவீஸ் சார்பில் கே.ஆர்.கண்ணன் தயாரித்துள்ள படம், ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்‘. எம்.ஏ.ராமகிருஷ்ணன் இயக்கி நடித்திருக்கிறார். ஆத்மியா, காருண்யா ஹீரோயின்கலி. எம்.வி.பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு. இசை கண்ணன். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட, கல்லூரி மாணவிகள் பெற்றனர்.விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது:ஒரு படத்தை தயாரித்து, நடித்து, இயக்கிவிட்டு வலியுடன் இருக்கிறேன். இந்த வலி சாகும்வரைக்கும் இருக்கும். 10 மாதத்தில் பிறந்தால்தான் குழந்தை.

ஒரு நாள் இரண்டு நாளில் பிறந்தால் குழந்தை இல்லை. இப்போது வெளிவரும் படங்கள் தியேட்டரில் இரண்டு மூன்று நாட்கள் இருந்துவிட்டு குறைபிரசவங்களாக வெளியேறி விடுகிறது. படத்துக்கு முன்பே திருட்டு டிவிடி வந்து விடுகிறது. ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ரிலீசுக்கு முன்பே திருட்டு டிவிடி என் கைக்கு வந்தது. ஒரு படம் 500 பேரின் உழைப்பு. அதை திருட்டு விசிடியில் பார்ப்பது 12 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு ஒப்பானது. எங்கள் கழுத்தை அறுத்து கொல்வதற்கு ஒப்பானது.

சினிமா இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்து பாருங்கள். காலையில் இருந்து இரவு வரை ஏதோ ஒரு வகையில் சினிமா உங்களோடு இருக்கிறது. சினிமா இல்லாமல் யாரும் வாழ முடியாது. அப்படிப்பட்ட சினிமாவை, சினிமா கலைஞர்களை திருட்டு விசிடியால் அழித்து விடாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.இயக்குனர்கள் விக்ரமன், சேரன், கரு.பழனியப்பன், ரவிமரியா, சமுத்திரக்கனி, கே.ஆர்.விஷ்வா, தயாரிப்பாளர்கள் ஹிதாயத், மூர்த்தி, பாஷா, பாடலாசிரியர்கள் அண்ணாமலை, சினேகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  தயாரிப்பாளர் கே.ஆர். கண்ணன் வரவேற்றார். ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்