Your Ad Here

வீட்டில் அத்துமீறி நுழைந்தவன் என்னிடம் வேலை கேட்டு வரவில்லை: சுருதிஹாசன்


  நடிகை சுருதிஹாசனை வீடு புகுந்து தாக்கியவனை போலீசார் கைது செய்துள்ளனர். அவன் பெயர் அசோக் சந்தர் திருமுக்கே (வயது 45). போரிவிலி திரைப்பட நகரில் உதவியாளராக இருக்கிறான். அசோக் சந்தர் மீது தாக்குதல், மானபங்கம், அத்துமீறி நுழைதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

சுருதிஹாசனை தாக்குவதற்கு அவர் வீட்டிற்கு போகவில்லை என்று அசோக் சந்தர் கூறியுள்ளான். இதுகுறித்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘‘சுருதிஹாசனுக்கு உதவியாளர் தேவை என்று கேள்விப்பட்டேன். எனது தம்பி வேலையின்றி இருக்கிறான். இதனால் அந்த வேலையை அவனுக்கு வாங்கி கொடுக்க முயற்சி செய்தேன். இதற்காகவே சுருதிஹாசனை நேரில் சந்திக்க சென்றேன்.

படப்பிடிப்பு நடந்த இடங்களில் அவரிடம் பேச முயன்றேன். முடியவில்லை. எனவே, அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு பற்றி தெரிந்து கொண்டு அங்கு போய் சந்திக்க முயன்றேன். சுருதிஹாசனை நான் தாக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அசோக் சந்தர், சகோதரி ஷாலினியும் வேலை கேட்டு போனதாகவே கூறியுள்ளார்.

இதை சுருதிஹாசன் மறுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

என் வீட்டில் அத்து மீறி நுழைந்தவர் வேலை கேட்டு வந்ததாக சொல்வது பொய். அந்த நபர் பல இடங்களில் என்னை பார்த்துள்ளார். படப்பிடிப்பு நடந்த இடங்களிளெல்லாம் இருந்து இருக்கிறார். அப்போது வேலை கேட்டு என்னை அணுகவே இல்லை. என் உதவியாளர்களிடமும் அதுகுறித்து அவர் பேசவில்லை. அவர் வேலை கேட்டு அணுகி இருந்தால் முடிந்ததை செய்து இருப்பேன்.

நான் ஒரு பெண். மும்பையில் தனியாக வசிக்கிறேன். எனது வீட்டில் கதவை திறந்து உள்ளே ஒருவன் நுழைய முயன்றதை பெரிய குற்றமாகவே கருதுகிறேன். மும்பை போலீசார் இப்பிரச்சினையில் சரியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு சுருதிஹாசன் கூறியுள்ளார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்