Your Ad Here

2000 துணை நடிகர்களுடன் போரிடும் அனுஷ்கா!


   தமிழில் ‘நான் ஈ’ படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி தெலுங்கில் மெகா பட்ஜெட்டில் உருவாக்கி வரும் புதிய படம் ‘பாஹுபலி’. இந்த படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சரித்திர கதையை பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்திற்காக பிரம்மாண்ட அரங்குகள், வியக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் என படத்தை மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டீஸர்கள் வெளியாகி படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தில் நடக்கும் போர் காட்சிக்காக 2000 துணை நடிகர்களை வைத்து படமாக்கி வருகிறார்கள். இவர்களுக்கு ஆறு மாத காலம் பயிற்சி கொடுத்து படமாக்குகின்றனர்.

இவ்வளவு பிரம்மாண்டத்துடன் உருவாகும் இந்த படம் தமிழிலும் ‘மகாபலி’ என்ற பெயரில் வருகிறது. 2015-ம் ஆண்டுதான் இப்படம் வெளிவரவிருக்கிறது. அதுவரைக்கும் எத்தனை பிரம்மாண்டங்கள் இந்த படத்தில் இடம் பெறுமோ? என அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்