மலையாள படத்துக்காக பாடகியானார் நஸ்ரியா!
மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோயினாக அவதாரமெடுத்தவர் நஸ்ரியா நசீம். இவர் தமிழில் ‘நேரம்’, ‘ராஜாராணி’, ‘நய்யாண்டி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில், இவர் நடித்த ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. மேலும் பல படங்களும் இவர் கைவசம் உள்ளது. மலையாளத்திலும் சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து ‘சலால மொபைல்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சரத் ஏ.ஹரிதாஸன் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் நஸ்ரியா பாடல் ஒன்றை பாடியுள்ளாராம். கோபி சுந்தர் இசையமைத்த அந்த பாடல் நன்றாக வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். நஸ்ரியா தொலைக்காட்சிகளில் ஏற்கெனவே பாடி, சிறந்த பாடகியாக நிரூபித்திருந்தாலும், திரைப்படத்துக்காக இவர் பாடுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
சிம்புவுக்கு ஏற்ற சரியான ஜோடி ஆண்ட்ரியா தான் என தயாரிப்பாளரும், நடிகருமான வி.டி.வி.கணேஷ் கூறியுள்ளார். தயாரிப்பாளராக இருந்த வி.டி.வி.க...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
யார் கண் பட்டுச்சோ, தொடர்ந்து மொக்கைப் படங்களாக் கொடுத்திட்டு இருக்கிற கார்த்தி சின்ன வயசுல எப்படி இருந்திருப்பார்? ஸ்கூலுக்கு டவுசர் பாக்...
Powered by Blogger.
