Your Ad Here

தமிழ் படங்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது இல்லை : இயக்குனர் - ராம்


   இந்தியன் பனோரமாவில் இடம் பெறும் ஒரே தமிழ் படம் 'தங்க மீன்கள்' என்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா?

எனக்கு அங்கீகாரம் கிடைத்ததற்கு மன திருப்தி ஏற்பட்டாலும், நிச்சயம், மகிழ்ச்சி இல்லை. எவ்வளவு நல்ல படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. குறைந்த பட்சம் மூன்று அல்லது நான்கு படங்களாவது இந்தியன் பனோரமாவில் இடம் பெற்று, தேர்வு ஆகியிருக்க வேண்டும். அப்போது தான், எல்லாருக்கும் மகிழ்ச்சி. இனி வரும் ஆண்டுகளிலாவது, இந்த குறை தீர்க்கப்பட வேணடும்.

மகளாக நடித்த சிறுமியை எப்படி, தேர்வு செய்தீர்கள்?

அறுபது குழந்தைகளுக்கு மேல் வரவழைத்து, பேச வைத்து, நடிக்க வைத்து, டெஸ்ட் எடுத்தோம். தமிழை தாய்மொழியாக கொண்ட குழந்தைகளுக்கு மட்டும் தான், 'டெஸ்ட்' எடுத்தோம். சாதனா என்ற சிறுமி மிகவும், பொருத்தமாக இருந்தாள். அவளையே, தேர்வு செய்தோம். 52 நாட்கள்
சலிக்காத உழைப்பை கொடுத்து, படத்தில் நடித்தாள். சொல்வதை புரிந்து கொண்டு, அப்படியே நடிப்பது, எல்லாம் சாதனாவிடம் இருந்தன. அவளின் தாய், தந்தை கூட, இந்த படத்தில் சிறிய வேடங்களில் நடித்துள்ளனர். தாய் லட்சுமி, ஸ்கூல் டீச்சராகவும், தந்தை வெங்கடேஷ், பள்ளி தலைமை ஆசிரியராகவும் பொருத்தமாக நடித்திருந்தனர்.


இந்த படத்துக்கான, இடத்தை எப்படி தேர்வு செய்தீர்கள்?

மலையில், ரயில் போக வேண்டும். ரயில் பாதை அருகே, ஏரி இருக்க வேண்டும். ஏரி அருகே ரோடு, ரோடு அருகே வீடு, இந்த மாதிரி லொகேஷனை, நானும், என் உதவியாளர்களும் ஒரு மாதம் தேடி அலைந்தோம். பின், நாகர்கோவில் அருகே வீராணி, ஆளூர் என்ற இடங்களை தேர்வு செய்தோம். 'ஆனந்த யாழை மீட்டுகிறாள்' என்ற பாடலை, அச்சன் கோவில் மலை மேலும், வயநாட்டிலும் எடுத்தோம்.

படத்திற்கு நீங்கள் பெற்ற வரவேற்பு?

வியாபார ரீதியாக திருப்திகரமாக இருந்தது. கோவா திரைப்பட விழா தவிர, சென்னை, பெங்களூர், திரைப்பட விழாக்களில் போட்டி பிரிவில் தங்க மீன்கள் படத்தை தேர்வு செய்திருக்கின்றனர். கோவா திரைப்பட விழாவில் படம் முடிந்ததும், அரங்கத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று, கரகோஷம் செய்தது என்னை நெகிழ வைத்தது. மிழகத்தின் பல பகுதிகளில், 40 பள்ளிகளில் குழந்தைகளுக்காகவும், ச்சர்களுக்காகவும் இந்தப்படம் ஸ்பெஷலாகவும் திரையிடப்பட்டுள்ளது.



இந்தப் படத்தின் கதை எப்படி உருவானது?

பாசத்திற்கு உரிய என் மகள் ஸ்ரீ சங்கர கோமதிக்கும், எனக்கும் உள்ள பாசப்பிணைப்பு தான், இந்த படம் உருவாக காரணமாக இருந்தது. அவளுக்கு, நன்றி சொல்ல வேண்டும். 'தங்க மீன்கள்' படம் நன்றாக வந்து, ரசிகர்களிடமும், மீடியாவிடமும் பாராட்டு பெற்றது பற்றி அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி.

உங்கள் அடுத்த படம்?

நகர வாழ்க்கையின் உறவு முறை பற்றிய கதையை உருவாக்கியிருக்கிறேன். 'தங்க மீன்கள்' படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக, இது இருக்கும். ஆண்ட்ரியாவும், வசந்த் ரவி என்ற புதுமுகமும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். வசந்த் ரவி, லண்டன் திரைப்பட பயிற்சி பள்ளியிலும், மும்பையில், பிரபல இந்தி நடிகர் அனுபம் கேர் நடத்தும் நடிப்பு பள்ளியிலும் பயிற்சி பெற்றவர்.

டைரக்டரான நீங்கள், நடிகராக மாறியது ஏன்?

முதலில், 'தங்க மீன்கள்' படத்தில், கருணாஸ் தான், நடிப்பதாக இருந்தது. அதிலும், வியாபார ரீதியாக பிரச்னை. இயக்குனர் கவுதம் மேனன், 'தந்தை ரோலுக்கு நீயே பொருத்தமாக இருக்கிறாய். நீ ஹீரோவாக நடித்தால், இந்தப்படத்தை நானே தயாரிக்கிறேன்' என்று உற்சாகப்படுத்தினார். அதனால் தான், நான் நடிகரானேன்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்