Your Ad Here

சச்சின் வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகர்களுக்கிடையே பலத்த போட்டி!


        இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 200வது போட்டியே பாலிவுட் பல உலகமே திரண்ட வந்து கண்டுகளித்திருக்கிறார்கள். இந்த போட்டியோடு அவர் ஓய்வு பெறுகிறார் என்பதால், இதையடுத்து சச்சினின் வாழ்க்கை கதையை மையப்படுபடுத்தி ஒரு படமும் இந்தியில் தயாராகிறதாம்.

அப்படத்தில் நடிக்க பல நடிகர்கள் நான் நீ என்று போட்டி போட்டு வருகிறார்களாம். சச்சினின் தீவிர ரசிகரான அமீர்கானும், அந்த போட்டியில் இருக்கிறாராம். அதோடு அந்த வாய்ப்பை எனக்கே தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளாராம்.

நான் டெண்டுல்கரின் ரசிகன். கிட்டத்தட்ட அவரைப்போன்று உருவமும், உயரமும் கொண்டவன். அதனால் அந்த படத்தில் நான் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்றும் கூறியுள்ள அமீர்கான், ஏற்கனவே இந்தியில் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவான லகான் படத்தில் தான் சிறப்பாக நடித்திருந்ததையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுகிறாராம்.

இதற்கிடையே, சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு, இந்தியில் தான் நடித்துள்ள ஒரு படத்தில் அவரைப்பற்றி ஒரு பாடல் இடம்பெறச்செய்து, அதை சச்சின் கடைசியாக விளையாட களமிறங்கிய நாள் அன்று மும்பையில் அந்த பாடலை வெளியிட்டு அவருக்கு அர்ப்பணித்துள்ளாராம் அமீர்கான்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்