போட்டிபோட்டு வசூலை குவிக்கும் பாலிவுட் படங்கள்!
2013ம் ஆண்டு இந்தி சினிமாவுக்கு நல்ல வசூல் ஆண்டாகவே இருக்கிறது. சொல்லி அடிக்கிற கில்லி என்பார்களே அதுமாதிரி இந்தப் படம் இத்தனை கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்த்து ரிலீஸ் பண்ணுகிறார்கள். அதன்படியே அது வசூலிக்கவும் செய்கிறது. அதுவும் முதல் நாளே கோடிக் கணக்கில் வசூலை அள்ளுகிறது. (லன்ஞ் பாக்ஸ் மாதிரியான படங்களுக்கு இது பொருந்தாது. இது பக்கா கமர்ஷியல் படங்களுக்கான கணிப்பு).
ஷாருக்கான், தீபிகா நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் முதல் நாளில் 33 கோடியை வசூலித்தது. கிரிஷ் 3 முதல் நாளில் 25 கோடியை அள்ளியது. பேஷாராம் 21 கோடியையும், யே ஜவானி ஹே திவானி 19 கோடியையும் வசூலித்தது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் ஏதாவது ஒரு படம் அபூர்வமாக இதுபோன்ற முதல் நாள் வசூலை அள்ளியிருக்கிறது. ரா ஒன். பாடிகார்ட், அக்னீபத், ஏக் தா டைகர், ஆகிய படங்களும் முதல்நாள் வசூலில் சாதனை படைத்த படங்கள்.
இப்போது இந்திப் படங்கள் தனது முதல் நாள் வசூலை வைத்தே படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானித்து விடுகிறது. டாப் ஹீரோக்களில் யார் படம் முதல் நாளில் அதிகம் வசூலிக்கிறது என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் திரையிடப்படும் தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறார்கள். உச்சபட்ச அளவாக கிரிஷ் 3 படம் 3500 தியேட்டர்களில் ரிலீசானது.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.
