Your Ad Here

டிசம்பர் 6-ம் தேதி ‘கல்யாண சமையல் சாதம்’ ரிலீஸ்


     திருமணத்திற்குப் பிறகு பிரசன்னா நாயகனாக நடிப்பில் வெளிவரவிருக்கும் முழுநீள நகைச்சுவைத் திரைப்படம் "கல்யாண சமையல் சாதம்".

லேகா வாஷிங்டன் நாயகியாக நடிக்க, ஒரு திருமணம், அதை சுற்றி அடக்கும் பல வேடிக்கையான சம்பவங்கைள வைத்து தயாராகி வரும் இத்திரைப்படத்தை, குறும்படங்களின் மூலம் பல விருதுகைளை வென்று குவித்த ஆர்.எஸ்.பிரசன்னா இயக்குகிறார்.

மேலும் படத்தில் டெல்லி கணேஷ், உமா பத்மநாபன் உள்பட பலர் நடிக்கின்றனர். 'அச்சமுண்டு அச்சமுண்டு' திரைப்படத்தின் இயக்குனர் அருண் வைத்யநாதனும் அதன் தயாரிப்பாளர் ஆனந்த் கோவிந்தனும் இணைந்து இந்நகைச்சுவைப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

இந்நிலையில் "கல்யாண சமையல் சாதம்" படத்தை டிசம்பர் 6ம் தேதி உலகம் முழுவதும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிசிஎஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்