Your Ad Here

பீதியை கிளப்பிய ஹிட் லிஸ்ட் நடிகை லட்சுமிமேனன்!


   பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என தொடர்ந்து 4 வெற்றிப்படங்களை கொடுத்த விஜயசேதுபதி தற்போது கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார். மேலும், இதுவரை புதுமுக இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடித்து வந்த அவர், இப்போது முன்னணி இயக்குனர்களின் படங்களிலும் கமிட்டாகி வருகிறார். இதில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புறமபோக்கு படத்தில் ஆர்யாவுக்கு இணையான வேடத்தில் நடிக்கிறார்.

அதேபோல், கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமிமேனனும், அதையடுத்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி போன்ற வெற்றிப்படங்களில் நடித்தவர் இப்போது விஷாலுடன் பாண்டியநாடு படத்திலும் நடித்து பேசப்படும் நடிகையாகி விட்டார். அதோடு, கேரளத்தில் இருந்து வந்து நேரம் படம மூலம் வேகமாக வளர்ந்துவந்த நஸ்ரியா நய்யாண்டி பட விவகாரத்தினால் வேகத்தடையில் சிக்கியதால், இப்போது லட்சுமிமேனன் தங்கு தடையில்லாமல் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்.

ஆக, தொடர் வெற்றியினால் ஹிட் லிஸ்ட் நடிகையாகிவிட்ட லட்சுமிமேனனுடன் நடிப்பதற்கு இப்போது மேல்தட்டு ஹீரோக்களே ரெடியாகிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் முன்னணி நடிகைகள் என்று சொல்லப்படுகிற நயன்தாரா, ஹன்சிகா போன்ற நடிகைகளுக்கே லட்சுமிமேனனின் அதிரடி வளர்ச்சி, தங்களுக்கு வரவேண்டிய புதிய படங்களுக்கு வேட்டு வைத்து விடுமோ என்ற பீதியில் இருக்கிறார்கள்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்