
தெலுங்கின் முன்னனி ஹீரோக்களான அல்லு அர்ஜூன், ராம்சரண் இணைந்து நடித்த ‘யெவடு’ திரைப்படம் டிசம்பர் 19ம் தேதி திரைக்கு வருகிறதாம். தெலுங்கில் ராம்சரண் நடித்த பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகியிருக்கிறது. மாவீரன் (மகதீரா) ராம்சரண் (ஆரஞ்சு) நாயக் ( நாயக்) போன்ற படங்கள் சொல்லலாம். சமீபத்தில் ராம்சரண் இந்தியில் நடித்த ஜாங்கீர் திரைப்படம் ஃப்ளாப் ஆனதால் யெவடு திரைப்படத்தை எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
படத்தில் அல்லு அர்ஜூன் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். அல்லு அர்ஜூன் படங்கள் ரீமேக் ஆகியிருக்கிறதே தவிர, இதுவரை ஒரு படமும் டப் செய்யப்படவில்லை.. குட்டி (ஆர்யா) வானம் (வேதம்) போன்ற படங்களை சொல்லலாம். அட.. படத்தில் ஹீரோயின் கூட ரெண்டு பேருதாங்க.. ஒருத்தர் ஸ்ருதி ஹாசன், மற்றவர் ஏமி ஜாக்ஷன்! ஸ்பெஷலாக காஜல் அகர்வாலும் படத்தில் தலைகாட்டுகிறாராம்.
படத்தின் அனைத்து வேலைகளும் முடித்த நிலையில் டிசம்பர் 19ம் தேதி அன்று திரையை தொடுகிறது ’யெவடு’
படத்தின் ட்ரெய்லர்!