
டி.வி நிகழ்ச்சியிலிருந்து துணை நடிகராக புரமோஷன் பெற்ற சீக்கிரத்தில், தொடர்ந்து கதாநாயகனாக வளர்ந்துவிட்ட சிவகார்த்திகேயன்(எத்தனை நாள் தான் வளரும் கதாநாயகர்னே சொல்றது) தற்போது ஜோடி போட்டு நடித்துக்கொண்டிருப்பது ஹன்சிகா மோத்வானியுடன்.
தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிவிட்ட சிவகார்த்திகேயன் ‘மான்கராத்தே’ திரைப்படத்தில் ஹன்சிகாவுடன் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டபோதே... ஒரு நிமிடம் மூச்சு விடுவதை மறந்து ஆச்சர்யத்தில் மூழ்கி பிறகு சுய நினைவு பெற்றது கோடம்பாக்கம். சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் ‘டணார்’ திரைப்படத்தில் அமலாபாலுடன் ஜோடியாக நடிக்கிறார் என்று கேள்விப்பட்டு எத்தனை பேர் மயங்கி விழுந்தார்களோ?
தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் ’டாணா’ திரைப்படத்தில் அமலாபாலுடன் ஜோடியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறாராம். காமெடி சப்ஜெக்ட் படங்கள் தனக்கு க்ளிக் ஆனாலும் தொடர்ந்து ஒரே மாதிரியான திரைப்படங்களில் நடிக்கவேண்டாம் என்பதற்காக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க முடிவெடுத்து, இந்த கதையை ஓகே செய்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.
போலீஸ் கையில் வைத்திருக்கும் லத்திக்கு போட்டியாக ஒல்லியான உடம்புடன், சிரிப்பு போலீஸாக வலம் வரப்போகிறாரா? ஜிம்முக்கு போய் உடம்பை ஏற்றி சிங்கம் போல(துரை சிங்கம் இல்லை) வலம் வரப்போகிறாரா? என்பதை ரசிகர்கள் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.