Your Ad Here

சிம்புவுடன் காதல் முறிவு - கவலைப்படாத ஹன்சிகா


சிம்புவுடன் காதல் முறிந்துவிட்டதாக வந்த தகவல்பற்றி ஹன்சிகா கவலைப்படாமல் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். வாலு படத்தில் சிம்புவுடன் ஹன்சிகா ஜோடியாக நடித்திருக்கிறார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. தங்கள் காதலை வெளிப்படையாக இணைய தளத்தில் அறிவித்தனர். அதன்பிறகு இரவு பார்ட்டியில் ஜோடியாக பங்கேற்றனர்.

இந்நிலையில் பசங்க பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க அவரது மாஜி காதலி நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ஹன்சிகா, சிம்பு காதல் முறிந்துவிட்டதாக தகவல் வெளியானது. இதுபற்றி சிம்புவிடம் கருத்து கேட்டபோது,ஆளைவிடுங்க என்று நழுவிவிட்டார். ஹன்சிகா மட்டும் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் ஹன்சிகா வழக்கம்போல் ஜாலியாகவே ஷூட்டிங்கில் பங்கேற்று வருவதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே படத்தில் ஜோடியாக நடிக்கிறார் ஹன்சிகா. இதன் ஷூட்டிங் புதுச்சேரியில் சமீபத்தில் நடந்தது. சிவகார்த்திகேயனுடன் ஹன்சிகா நடித்த டூயட் காட்சி படமாக்கப்பட்டது. வழக்கத்தைவிட உற்சாகமாக இக்காட்சியில் ஹன்சிகா நடித்ததாக பட குழுவினர் தெரிவித்தனர். 

இதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில்,மான் கராத்தே படத்தின் பாடல் காட்சியில் ஹன்சிகாவுடன் ஷூட்டிங்கில் பங்கேற்றேன். எதிர்நீச்சல் படத்துக்காக இங்கு ஏற்கனவே ஷூட்டிங்கில் பங்கேற்றிருக்கிறேன். அனிரூத்தின் செம பாட்டுக்கு ஹன்சிகாவுடன் புதுவையில் நடித்து வருகிறேன் என குறிப்பிட்டிருக்கிறார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்