"விஸ்வரூபம்2' பிப்ரவரியில் வெளியீடா?
கமலின், "விஸ்வரூபம்2 படம் வெளியிடும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. என, பட குழுவினர் தெரிவித்தனர். நடிகர் கமல்ஹாசன், நடித்து, இயக்கி, தயாரித்த, "விஸ்வரூபம் படம் பல பிரச்னைகளை சந்தித்தபோதும், வெற்றி பெற்றது. இதனால், "விஸ்வரூபம்2 படத்தை, நடித்து, இயக்கி, கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு இன்னும் நடத்தப்பட வேண்டியுள்ளது எனவும், வெளியீடு தேதி தற்போது சொல்லமுடியாது எனவும், கடந்த அக்டோபர் மாதம் கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், இப்படம் பொங்கலுக்கு வெளியிடப்படுமா? என, கமல் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். பொங்கலுக்கு,"கோச்சடையான், வீரம், ஜில்லா படங்கள் வெளியாவதால், "விஸ்வரூபம்2 படம் வெளியீடு குறித்து, அறிவிப்பு வெளியாவதில் தாமதமாகிறது. இந்நிலையில், படம், வரும், ஜனவரி இறுதியில் வெளியிட வாய்ப்புள்ளதாக, கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியானது.
இது குறித்து, படக்குழு தரப்பில் கூறியதாவது: சில காட்சிகள் படப்பிடிப்பு நடத்தவேண்டியுள்ளது. முன்பு "விஸ்வரூபம் முதல் பாகம், படம் தமிழில் மட்டும், "ஆரோ 3 டி தொழில் நுட்பத்திலும், மற்ற மொழிகளில், சாதாரண டி.டி.எஸ்.சிலும் தான் வெளியிடப்பட்டது. "விஸ்வரூபம் 2 தமிழ், தெலுங்கு, இந்தியில், "ஆரோ 3டி நவீன தொழில் நுட்பத்தில் வெளியிடப்பட திட்டமுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு ஹாலிவுட்டில் சவுண்ட் மிக்ஸிங் நடந்து வருகிறது. படத்தின் பணிகள் முடிக்க குறைந்தது இரண்டு மாதங்கள் வரை ஆகும். இதனால், வரும், பிப்ரவரிக்கு பிறகே, பட வெளியீடு குறித்து அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
