Your Ad Here

கோவா திரைப்பட விழாவில் தங்க மீன்களுக்கு பலத்த வரவேற்பு


     கோவாவில் தற்போது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. வருகிற 30ந் தேதி வரை நடக்கிறது. இதில் தமிழ் நாட்டில் இருந்து ராம் இயக்கிய தங்க மீன்கள் படம் மட்டுமே திரையிட தேர்வாகியிருந்தது.
 நேற்று (நவம்பர் 26) கோவாவில் உள்ள ஐநாக்ஸ் தியேட்டரில் தங்க மீன்கள் திரையிடப்பட்டது. உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து வந்திருந்த சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் படத்தை பார்த்தனர்.

ஆங்கில சப் டைட்டிலுடன் திரையிடப்பட்டது. படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று 5 நிமிடங்கள் கைதட்டினர். ராமை கைகுலுக்கியும், கட்டித் தழுவியும் பாராட்டினர். அவருடன் சென்றிருந்த நடிகை பத்மப்ரியா, ஷெல்லி, தயாரிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோரையும் பாராட்டினர். கடைசியாக ராம் பேசினார்.

தமிழ் நாட்டில் தந்தைக்கும் மகளுக்குமான உறவு எத்தகையது என்பதை உருக்கத்துடன் பேசினார். "மகள்களை பெற்ற தந்தைக்கு தெரியும் முத்தம் காமத்தை சார்ந்தது அல்ல" என்ற வாக்கியத்தை ஆங்கிலத்திலும், தமிழிலும் அவர் சொன்னபோது அரங்கத்தில் இருந்தவர்கள் மீண்டும் எழுந்து நின்று கைதட்டினார்கள். உணர்ச்சி பெருக்கில் ராம் கண்கலங்கினார். படம் மீண்டும் 29ந் தேதியும் திரையிடப்படுகிறது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்